வெள்ளை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/4 கிலோ

தக்காளி - 2

வெங்காயம் - 3.

பச்சை மிளகாய் - 5

தயிர் புளித்தது - 1 கப்

எலுமிச்சை - பாதி மூடி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மல்லி இழை - கொஞ்சம்

பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று

நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:

ஊற வைத்த கசகசா - 1/2 மேசைக்கரண்டி

தேங்காய் - மூன்று சில்

பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி

முந்திரி - 10

செய்முறை:

அரைக்க வேண்டியதை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கி மட்டனை போட்டு வதக்கவும்.

மட்டனை ஐந்து நிமிடம் வதக்கி பச்சை மிளகாய், தக்காளி, தயிர் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

பின் அரைத்த பேஸ்ட், உப்பு, தனியா தூள் கலந்து வதக்கி தேவையானளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடவும்..

வெந்ததும் மூடியை திறந்து எலுமிச்சைசாறு ஊற்றி சிறிய தீயில் குருமாவின் மேல் எண்ணெய் பிரிந்து வரும் வரை வைத்து பின் மல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: