வெஜ் வெள்ளை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மிக்ஸ்ட் வெஜிடேபுள்ஸ் (உருளை, காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி, கேரட், கார்ன்) - 1/4 கிலோ (தேவைக்கு கூட்டிக் கொள்ளலாம்)

எண்ணெய்யில் வதக்கி அரைக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1 1/2

பச்சை மிளகாய் - 6

தயிர் - 1/2 கப்

பூண்டு - 3 பல்

இஞ்சி - ஒரு துண்டு

முந்திரி - 4

கசகசா - 1 தேக்கரண்டி

தேங்காய் - நான்கு பத்தை

பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு

சோம்பு (தேவைப்பட்டால் வாசனைக்கு) - 1 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - 3 தேக்கரண்டி

டால்டா அல்லது நெய் - 1/2 தேக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

கறிவேப்பிலை - 2 கொத்து

வெங்காயம் - பாதி

கொத்தமல்லி - தேவைக்கு

செய்முறை:

உருளை, காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி, கேரட், கார்ன், உப்பு போட்டு வேக வைத்து கொள்ளவும்.

தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.

அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து (தயிரை தவிர) வாணலியில் போட்டு பச்சை வாடை போகும் வரை வேக விடவும்.

கடைசியில் வெந்த காய்களை சேர்க்கவும்.

தயிரை அரைக்க வேண்டாம் காய் சேர்க்கும் போது தயிரை நல்ல கலக்கி சேர்க்கவும்.

சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: