வெஜ் மிளகு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோல் நீக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், காலிபிளவர் - கலந்து 1/4 கிலோ

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1 1/2 தேக்கரண்டி

கையால் பொடித்த மிளகு - 2 தேக்கரண்டி

கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி

முந்திரி - 5

பாதாம் - 5

ஏலக்காய் - 2

செய்முறை:

காய்களை வேகவைத்து எடுத்து வைக்கவும்.

அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் (அ) பட்டர் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு போட்டு தாளித்து, வெங்காயம் சேர்க்கவும்.

வெங்காயம் நிறம் மாற ஆரம்பித்ததும் பூண்டு சேர்க்கவும்.

வதங்கியதும் தக்காளி சேர்த்து பாதி வதக்கவும்.

இதில் கரம் மசாலா, மிளகாய் தனியா தூள், உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு கிளறவும்.

பின் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

குறிப்புகள்: