வெஜிடேபிள் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1

கேரட் - 1

பீட்ரூட் - பாதி

பீன்ஸ் - 8

பட்டாணி - 1/4 கப்

சோள மணிகள் - 1/4 கப்

கருணைகிழங்கு - 1/4 கப்

காலிஃப்ளவர் - 1/4 கப்

பச்சை மிளகாய் - 4

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தயிர் - 1/4 கப்

எண்ணெய் - 3 தேக்கரண்டி

டால்டா அல்லது நெய் - 2 தேக்கரண்டி

பட்டை - ஒரு அங்குலம் ஒன்று

கிராம்பு - 2

ஏலம் - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

தக்காளி - 3

வெங்காயம் - 3

பாதாம் - 5

முந்திரி - 5

தேங்காய் - இரண்டு பத்தை

கசகசா - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - 1/2 கட்டு

புதினா - கால் கட்டு

செய்முறை:

எண்ணெயும் டால்டாவையும் காய வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.

வெங்காயம் கலர் மாறியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல பொன்னிறமாக வதக்கவும்.

பாதி கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாயை ஒடித்து போட்டு வதக்கவும்.

பிறகு தக்காளியை நான்காக நறுக்கி போடவும். அதில் முதலில் உருளை, கேரட், கருணைகிழங்கு, பீட்ரூட்டை போட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.

பிறகு பீன்ஸ், கார்ன், பட்டாணி, காலிஃப்ளவரை போட்டு வதக்கவும்.

பிறகு மிளகாய் தூள், உப்பு தூள், மஞ்சள் தூள் போட்டு தயிரையும் சேர்த்து வதக்கி தீயை சிம்மில் வைத்து வேக விடவும்.

தேங்காய், பாதாம், கசகசாவை அரைத்து தேவைக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கடைசியில் முந்திரியை பவுடர் செய்து தூவி, மீதி உள்ள கொத்தமல்லி புதினாவை பொடியாக நறுக்கி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: