வெஜிடபிள் வெள்ளை குருமா
தேவையான பொருட்கள்:
காரட் - 100 கிராம்
உருளைகிழங்கு - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
எலுமிச்சை பழம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
பொடிக்க:
பட்டை - 1
கிராம்பு -2
ஏலக்காய் - 1
செய்முறை:
முதலில் காரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கினை ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தினை வெட்டி வைக்கவும்.பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
தேங்காய் மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தினை போட்டு வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் நறுக்கி வைத்துள்ள காரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக 3 -5 நிமிடம் வதக்கவும்.
பொடித்து வைத்துள்ள பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயினை இதில் இப்பொழுது சேர்க்கவும்.
அதன் பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் விழுதினை சிறிது தண்ணீர் சேர்த்து இதில் ஊற்றவும்.
உப்பு சேர்த்து கலக்கி நன்றாக வேகவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவவும்.
பரிமாறும் பொழுது எலுமிச்சை சாறினை இதில் பிழியவும்.( புளிப்புக்கு தக்காளி சேர்க்காததால் )