வெஜிடபிள் குருமா (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 50 கிராம்

காலிஃப்ளவர் - 250 கிராம்

பச்சைப்பட்டாணி - 3/4 கப்

உருளை கிழங்கு - 100 கிராம்

காரட் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

வெங்காயம் - 150 கிராம்

பூண்டு - 2-3 பல்

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 மேசைக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

நறுக்கிய கொத்தமல்லி இலை - 3/4 கப்

எண்ணெய் - ஒரு குழி கரண்டி

செய்முறை:

காலிஃப்ளவரை சிறிது நேரம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை பட்டாணியை தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கு, காரட் இரண்டையும் தோல் சீவிவிட்டு சிறு சிறு க்யூப் வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

நறுக்கிய காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் இஞ்சி, பூண்டை நறுக்கி போட்டு விழுதாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், காய்கறிகள், பட்டாணி ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும்.

அத்துடன் உப்பையும், சர்க்கரையும் சேர்த்து கெட்டியாகும் வரை வதக்கவும்.

இந்த கலவையுடன் 2 கப் வெந்நீரைச் சேர்த்து, நன்கு வேக வைக்கவும்.

வெந்தவுடன் இறக்கி வைத்து கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்புகள்: