வெஜிடபிள் குருமா (1)
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 200 கிராம்
கேரட் - 200 கிராம்
பீன்ஸ் - 200 கிராம்
பட்டாணி - 200 கிராம்
கரம்மசாலா - 2 தேக்கரண்டி
கிராம்பு- 3
ஏலம் - 2
கருவா - சிறிது
டால்டா - 100 கிராம்
முந்திரி பருப்பு - 100 கிராம் (விழுது)
தேங்காய் - 100 கிராம் (விழுது)
இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு - 1 தேக்கரண்டி
கிரீன் சில்லி பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
வெள்ளை மிளகு - 1 தேக்கரண்டி
பால் - 50 மில்லி
கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணெய் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காய்கறிகளை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்
பட்டாணியை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.
பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கருவா, ஏலம், கிராம்பு போட்டு தாளித்து இஞ்சி,பூண்டு போட்டு வேகவைத்த காய்கறிகளை போட்டு வதக்கி ,பட்டாணி போட்டு வதக்கவும்.
பின் வெள்ளை மிளகு, கிரீன் சில்லி பேஸ்ட் போட்டுவதக்கி , தேங்காய் விழுது,முந்திரி விழுது போட்டு நன்கு வதக்கவும் பின் பாலை ஊற்றி கொதித்தம் இறக்கும் போது உப்பு போட்டு நன்கு கிளறி கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.