வாழைப்பூ குருமா
தேவையான பொருட்கள்:
சிறிய வாழைப்பூ - 1
வெங்காயம் - 3
தக்காளி - 3
பட்டை, கிராம்பு, அன்னாசிப் பூ, இலை - தாளிக்க
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணை - 3 மேசைக்கரண்டி
மல்லித் தழை - இரண்டு கொத்து
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
அரைக்க:
வர மிளகாய் - 8
தேங்காய் - மூன்று மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
இஞ்சி - 5 கிராம்
செய்முறை:
வாழைப்பூவை பிரித்து இதழ்களின் நடுவில் உள்ள நரம்பை நீக்கி, இரண்டிரண்டாக நறுக்கி, மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
அரைக்க வைத்துள்ளவற்றில் வர மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா ஆகியவற்றை பத்து நிமிடம் கால் டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து தேங்காய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக இல்லாமல் சற்று பெரியதாக நறுக்கவும்
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளாற்றை போட்டு தாளிக்கவும்.
பிறகு வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
இப்போது தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
எண்ணை பிரிந்ததும் வாழைப்பூவை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி அரைத்த மசாலாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலக்கி ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
இறக்கி மல்லித் தழை தூவி பரிமாறவும்.