வாழைக்காய் குருமா
தேவையான பொருட்கள்:
வாழை காய் - 4
உருளை கிழங்கு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
தேங்காய் பூ - 1 கோப்பை
முந்திரி பருப்பு - 4
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா விதை - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
கரம்ம சாலா - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1/4 கோப்பை
நறுக்கிய புதினா - 2 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி - 2 தேக்கரண்டி
உப்பு தூள் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வாழைக்காயை தோல்சீவி உருளைக்கிழங்கை தோல்சீவாமல் வேண்டியத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். தக்காளியை கரைத்துக் கொள்ளவும்.
மிளகாய், தனியா, மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை இலேசாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயைக் காயவைத்து சோம்பைப் போடவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு மஞ்சள்தூளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு நறுக்கி காய்கறிகளைக் கொட்டி, தக்காளியை போட்டு உப்பைச் சேர்த்து கிளறி இரண்டு கோப்பை நீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
காய்கள் நன்கு வெந்தவுடன் நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கரம்மசாலா மற்றும் புதினா, கொத்தமல்லியைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இந்த குருமா வெள்ளைச் சோற்றில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.