வறுத்த உருளை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுக்க:

சதுர துண்டங்களாக நறுக்கிய உருளை கிழங்கு - 2

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தாவர எண்ணெய் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

வதக்க:

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

இரண்டாக கீறிய பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய்ப்பால் - 1 1/2 கப்

நறுக்கிய தக்காளி - 1

ஊறவைத்து அரைத்த முந்திரிப்பருப்பு - 10

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 30 நிமிடம் கழித்து இளம் சிவப்பாக எண்ணெயில் வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.

வறுத்த எண்ணெயில் இருந்து 3 தேக்கரண்டி எண்ணெயை வேறு வாணலியில் ஊற்றி காயவைத்து சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொன்னிறமாக வதக்கவும்.

பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தக்காளி போட்டு கிளறவும். தக்காளி மசிந்ததும் உப்பும், தேங்காய்ப்பாலும், வறுத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதித்ததும் அரைத்த முந்திரி பேஸ்ட்டை போட்டு கொதிக்கவிட்டு குருமா இறுகி கெட்டியாகும்.

அதில் கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: