முர்கி குருமா
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்பூ - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
புதினா, கொத்தமல்லி இலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா, உப்பு, மஞ்சள்த்தூள், தனியாத்தூள், போட்டு விரவி 10 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்த்வுடன் நீட்டமாக அரிந்த வெங்காயம், ப.மிளகாய் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிரட்டி வைத்த சிக்கன் கலவையினை சேர்த்து 10நிமிடம் வதக்கவும்.
பிறகு தயிர், கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வதக்கவும்
5 நிமிடம் கழித்து தேங்காய்பூ, மிள்குத்தூள்,நறுக்கிய கொ.மல்லி, புதினா போட்ட்டு 15 நிமிடம் குறைவான தணலில் வைத்து இறக்கி பரிமாறவும்.