முந்திரிப்பருப்பு குருமா
தேவையான பொருட்கள்:
முந்திரிப்பருப்பு - 1 கப்
உருளைக்கிழங்கு - 3
கேரட் - 2
பீன்ஸ் - 5
காலிஃப்ளவர் - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கிராம்பு - 3
பட்டை - 4
ஏலக்காய் - 2
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - 10 இலை
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தயிர் - 1/2 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை அரிந்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கிராம்பு, பட்டை, நசுக்கிய ஏலக்காய் போட்டு வதக்கி, பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் உருளை, பீன்ஸ், கேரட், பட்டாணி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 4 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
பாதி கப் முந்திரியை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
காய்கள் அனைத்தும் வெந்தவுடன் அரைத்த முந்திரியை கலக்கவும்.
ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிச்சம் உள்ள முந்திரியை சேர்த்து பாதி சிவக்கும் வரை வதக்கி, கறிவேப்பிலை சேர்த்து அதனை வெந்த காய்களுடன் கொட்டி இறக்கி பரிமாறவும்.