முட்டை குருமா (8)
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
வெங்காயம் - 2
தக்காளி - 1 பெரிதாக
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் - 1 கப்
பொட்டுகடலை - 2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை ஆம்லெட்டாக ஊற்றி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வறுத்து அரைக்க வேண்டியவற்றை நன்றாக வறுத்து நைசாக சிறிது தண்ணியாக அரைக்கவும்.
சிறிது எண்ணெயில் வெங்காயம் தக்காளியை வதக்கி அரைத்தவற்றுடன் மிளகாய் தூள் உப்பு உடன் கொதிக்கவிடவும்.
தண்ணியாக இல்லாமல் ஓரளவு திக்காக வந்ததும் ஆம்லெட் துண்டுகளை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்