முட்டை குருமா (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை அவித்தது - 4

தேங்காய் - 4 மேசைக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 4

பட்டை - 1

கிராம்பு - 1

ஏலம் - 1

சோம்பு - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 4 பல்

மிளகாய்- 2-4

புதினா, மல்லி இலை - சிறிது

வெங்காயம் - 1

தக்காளி- 2

மஞ்சல் பொடி - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளி மெல்லியதாக கட் செய்து வைக்கவும். அவித்த முட்டை சிறிது கீறி விட்டுக்கொள்ளவும்.

தேங்காய், மற்ற பொருட்கள் யாவும் சேர்த்து சிறிது எண்ணெயில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயம், தக்காளி போட்டு, உப்பு சேர்த்து வதக்கி, மூடி போட்டு சிறிது மசிய விடவும்.

பின்பு அரைத்த தேங்காய் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிவந்ததும் அவித்த முட்டை சேர்த்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளியவும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: