முட்டை குருமா (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்த முட்டை - 4

பெரிய வெங்காயம் - 2

காஷ்மீர் மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

எள்ளு - 1 தேக்கரண்டி

சோம்பு - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

நெய் - 1 மேசைக்கரண்டி

ஆயில் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வதக்க:

சோம்பு - 1/4 தேக்கரண்டி

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

பட்டை - சிறிதளவு

மிளகாய் வத்தல் - 2

மிளகு - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி

முந்திரி பருப்பு - 5

சின்ன வெங்காயம் - 7

இஞ்சி - சிறுத் துண்டு

பூண்டு - 6 பல்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, புதினா - சிறிதளவு

தக்காளி - 2

தேங்காய் - 1/4 மூடி

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்.

எள்ளை தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும். ஆறின பிறகு மிக்ஸியில் எள்ளையும் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

இதில் அரைத்து வைத்த மசாலா கலவையை ஊற்றி காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொதித்தவுடன் நன்றாக கிளறி விட்டு சிம்மில் வைத்து விடவும்.

முட்டையை முக்கால்வாசி கீறி கிரேவியில் சேர்த்து 5 நிமிடம் சிம்மிலேயே வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: