முட்டை குருமா (1)
தேவையான பொருட்கள்:
முட்டை - 3
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் பால் - 1/2 கப்
தேங்காய் விழுது - கால் கப்
பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை - தலா 3
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்பs
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி இரண்டாக வெட்டி வைக்கவும்.
கொத்தமல்லித் தழையை சிறிது நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, கரம் மசாலா தூள், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த கொத்தமல்லித் தழை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து கரையும் வரை வதக்கி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கிளறி விட்டு, தேங்காய் பால், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக கொதிக்க விடவும்.
கொதித்து குருமா சிறிது கெட்டியானதும் வெட்டி வைத்துள்ள முட்டைகளைச் சேர்த்து சிறுதீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இது பரோட்டா, சப்பாத்தி, கல் தோசை போன்றவற்றிக்கு நன்றாக இருக்கும்.