மீன் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ

தேங்காய் - 1/2 கப்

புளி - ஒரு கோலிகுண்டு அளவு

வெங்காயம் - 200 கிராம்

தக்காளி - 200 கிராம்

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 3 தேக்கரண்டி

பூண்டு - 6 (விழுதாக அரைத்து கொள்ளவும்)

பட்டை - சிறிய துண்டு

ஏலக்காய் - 2

கிராம்பு - 2

கசகசா - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

தயிர் - 1/2 குழிக்கரண்டி

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து சிவக்க வறுக்க வேண்டும். பிறகு பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும்.

தீயை கம்மி செய்து நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். எல்லா தூளையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தேங்காய், சோம்பு, கசகசா சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். குழம்பு கொதி வந்ததும் அரைத்த விழுது, கறிவேப்பிலை, உப்பு, கொத்தமல்லி இலை தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்ததும் மீன் சேர்த்து கொதிக்க விடவும்.

மீன் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: