மஷ்ரூம் குருமா (1)
தேவையான பொருட்கள்:
நறுக்கிய மொட்டுக் காளான் - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 5 பல்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 2
பொட்டுக்கடலை - சிறிதளவு
செய்முறை:
காளானை சிறிதளவு தண்ணீரில் 7 நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை கெட்டியாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, மிளகாய்த்தூள் போட்டு மூடிப்போட்டு 10 நிமிடங்கள் வதக்கவும்.
அவை நன்கு சுருண்டு வதங்கியவுடன் மஞ்சள்தூள், உப்பு, வேகவைத்த காளான், தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
நன்கு கெட்டியான பின் கரம் மசாலாதூள், கொத்தமல்லி இலை, புதினா தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறவும்.