மஷ்ரூம் குருமா
0
தேவையான பொருட்கள்:
பட்டன் மஷ்ரூம் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
தேங்காய் பால் (முதல் பால்) - 1 கப்
தேங்காய் பால் (இரண்டாம் பால்) - 1 கப்
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பானில் ஆயில் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
தனியா, சில்லி, கரம் மசாலா தூள்களை சேர்க்கவும்.
பிறகு கட் செய்த மஷ்ரூம் சேர்த்து சுருள வதக்கவும்.
இரண்டாம் தேங்காய் பாலை சேர்த்து வேக விடவும்.
பிறகு திக்கான முதல் தேங்காய் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.