மட்டன் நீலகிரி குருமா
தேவையான பொருட்கள்:
மட்டன் - 200 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - ஒரு சிறிய கட்டு
புதினா - 3/4 சிறிய கட்டு
துருவிய தேங்காய் - அரை மூடி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
புதினா, மல்லி, பச்சை மிளகாய், தேங்காய் ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
மட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, எண்ணெய் மற்றும் 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 2 ஸ்டீம் வரை வேக வைக்க வேண்டும்.
அரைத்த விழுதை வேக வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து 15 நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.