மட்டன் குருமா
தேவையான பொருட்கள்:
ஆட்டிறைச்சி - 1/2 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
மல்லித்தழை - சிறிது
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் 3 தேக்கரண்டி
மஞ்சள்பொடி - 1 சிட்டிகை
தயிர் - 1/4 கப்
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
பட்டை - சிறுதுண்டு
ஏலம் - 3
கிராம்பு - 3
எண்ணெய் - 1/4 கப்புக்கும் குறைவாக
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி
கறிப்பொடி - 2 மேசைக்கரண்டி அல்லது வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து அரைத்த பவுடர்
செய்முறை:
தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலம் தாளிக்கவும்.
சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து கிளறவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இறைச்சி சேர்த்து நிறம் மாறு வரை வதக்கி, பச்சைமிளகாய், மல்லித்தழை, மசாலாதூள்கள் ஒவ்வொன்றாக சேர்க்கவும். தயிர் சேர்த்து கிளறவும்.
அரைத்த தேங்காய் விழுதுடன், 1 கப் நீர் சேர்த்து கிளறி மூன்று விசில் வைக்கவும்.
அடுப்பை அணைத்து 10 - 20 நிமிடம் கழித்து குக்கரை திறந்தால் எண்ணெய் மிதக்கும் சுவையான மட்டன் குருமா ரெடி