பொரிகடலை குருமா
தேவையான பொருட்கள்:
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
பச்சை மிளகாய் - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
தேங்காய் - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1 சிறு துண்டு
லவங்கம் - 2
பொரிகடலை - 3 தேக்கரண்டி
செய்முறை:
அரைக்க வேண்டிய அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் ஏலக்காய், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
இப்போது மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், உப்பு, அரைத்த மசாலா கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு கருவேப்பிலை, கொத்தமல்லி தூவிவிடவும்.