பொட்டுக்கடலை குருமா
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
பொட்டுக்கடலை - 3 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கசகசா - 1/2 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - 1
தாளிக்க:
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
அரைக்க கொடுத்தவற்றை தேவையான நீர் விட்டு நன்றாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி சிறிது நீர் விடவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து தேவையான நீர் விட்டு பச்சை வாசம் போக நன்றாக கொதிக்க விடவும். அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும்.
நன்றாக கொதித்து குருமா பதம் வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
தோசை, இட்லிக்கு சுலபமான சுவையான குருமா.