பூண்டு இல்லாத குருமா
தேவையான பொருட்கள்:
நீங்கள் விரும்பும் காய்கறிகள் - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
தேங்காய் துருவல் - 1 கப்
முந்திரிப் பருப்பு - 8
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
இஞ்சி - ஒரு துண்டு
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
தாளிக்க:
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
எண்ணை - 2 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வையுங்கள்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
தேங்காய்த்துருவல், முந்திரி இரண்டையும் அரைத்துத் தனியாக வைக்கவும்.
சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை ஆகியவற்றை அரைத்துத் தனியாக வைக்கவும்.
எண்ணை, நெய் இரண்டையும் காய வைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காய் மூன்றையும் போட்டுத் தாளிக்கவும்.
பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த விழுதைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
தேங்காய் விழுது, வேக வைத்த காய்கறிகள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.