புரோட்டீன் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டாணி, தட்டைபயிறு, பாசிப்பயிறு, ராஜ்மா, கொண்டைகடலை, நிலக்கடலை இவை அனைத்தும் சேர்த்து முளைக்கட்டியது - 200 கிராம்

பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - 100 கிராம்

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

வரமிளகாய் - 3

மிளகு - ஒரு தேக்கரண்டி

மல்லி தூள் - 2 தேக்கரண்டி

சீரகம், வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

தக்காளி - 2

தேங்காய் துருவல் - கால் மூடி

செய்முறை:

முளைக்கட்டிய பயிறு வகைகளை குக்கரில் ஒரு விசில் வைத்து வேக வைக்கவும்.

வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து அரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் வேக வைத்த பயிர் வகைகளை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்.

வெங்காயம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும். மல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

ரொட்டி, சப்பாத்தி, நாண், பரோட்டா இவைகளுடன் பரிமாறலாம்.