பீன்ஸ் வெள்ளை குருமா
0
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 200 கிராம்
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 மூடி
முந்திரி - 6
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பீன்ஸை 1/2 அங்குல துண்டுகளாக வெட்டவும்.
வெங்காயத்தை சன்னமாக, நீளமாக வெட்டவும். தேங்காய், முந்திரியை நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூள் உப்பு சேர்த்து, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
காய் வெந்தவுடன், அரைத்த விழுதை ஊற்றி, திக்காக கொதித்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.