பிதுக்கு பருப்பு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை மொச்சை கொட்டை - 1/2 கிலோ

காய்ந்த மிளகாய் - 5

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

இஞ்சி - 1 துண்டு

தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மொச்சைக் கொட்டையை 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பருப்பை மட்டும் பிதுக்கி எடுக்கவும்.

பிதுக்கிய பருப்பை அரை லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, பருப்பை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.

மிளகாய், சீரகம், சோம்பு, இஞ்சி, பூண்டு, தேங்காய்த்துருவல், தனியாத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் வேக வைத்த மொச்சை பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: