பனீர் பட்டாணி குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பனீர் - 200 கிராம்

பட்டாணி - 1/4 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்

தக்காளி விழுது - 1/2 கப்

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தேங்காய் பால் - 1 கப்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பட்டாணியை 7 மணி நேரம் ஊறவைத்து பின் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.

பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் சிறிது எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் தக்காளி விழுதை போட்டு வதக்கவும்.

அவை வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

பின் வேகவைத்த பட்டாணி, பொரித்த பனீர், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் கொதித்த பின் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: