பட்டாணி குருமா (1)
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடிக்க:
மிளகு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்
பொடிக்க வேண்டியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து தூளாக்கி கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, சிறிது வதங்கியதும் தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கவும். பட்டாணி, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, உப்பு எல்லாம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்
எல்லாம் சேர்த்து நன்றாக கொதித்ததும் பொடித்தவற்றை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
குறிப்புகள்:
சப்பாத்திக்கு சுவையாக இருக்கும்.