பட்டாணி உருளை குருமா
0
தேவையான பொருட்கள்:
பட்டாணி - 50 கிராம்
உருளை - 1/4 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
கறிமசாலா தூள் - 6 தேக்கரண்டி
செய்முறை:
பட்டாணியும் உருளையும் பாதியாக வேக வைக்கவும்
உருளையை தோலுரித்து நான்கு பாகமாக நறுக்கிக்கொள்ளவும்
தேங்காயை மையாக அரைத்துக்கொள்ளவும். கடைசியில் கறிமசாலா தூளை சேர்த்து ஒரு சுற்று விடவும்
எண்ணெயில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
பின்னர் கொத்தமல்லி, தக்களி சேர்த்து கிளறவும்
பின் தேங்காய் விழுதில் நீர் கலந்து கரைத்து அதில் சேர்க்கவும்
மசாலா வாசனை போனதும் உருளையும் பட்டாணியும் சேர்த்து வேகும் வரை வைத்திருந்து பின் இறக்கி பரிமாறவும்.