பட்டாணி உருளைகிழங்கு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முதல் நாளே ஊறவைத்த காய்ந்த பட்டாணி - 1/2 கப்

வேகவைத்து தோலுரித்து துண்டங்களாக்கிய உருளைக்கிழங்கு - 1

தேங்காய் - 1/2 மூடி

நறுக்கிய வெங்காயம் - 1 கப்

நறுக்கிய தக்காளி - 1 கப்

சோம்பு - 1 1/2 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தேங்காயையும், சோம்புவையும் மிக்ஸியில் அரைக்கவும்.

வெங்காயமும் தக்காளியும் வதங்கும் பொழுது, உருளை கிழங்கையும் பட்டாணியையும் சேர்த்து உப்பு போடவும்.

அதை கிளறிய பின் அரைத்த கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.

4 நிமிடங்களுக்கும் பின் இறக்கிவிடலாம்.

பின் தனி கடாயில் 2 டீஸ்பூன் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் ஒரு பட்டை,2 கிராம்பு, கறிவேப்பிலை , ஒரு சிவப்பு மிளகாயை கிள்ளி போட்டு தாளித்து மேலே ஊற்றி பறிமாறும் போது கிளறி பறிமாறலாம்.

குறிப்புகள்: