பட்டர் பீன்ஸ் குருமா
தேவையான பொருட்கள்:
பட்டர் பீன்ஸ் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
இஞ்சி - சிறியதுண்டு
பூண்டு - 5 பல்
பச்சைமிளகாய் - 2
மஞ்சள்த்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 1 சிறிய குழிகரண்டி
பட்டை - 1
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
கசகசா - 1/4 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கீற்று
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப்ப
செய்முறை:
குக்கரில் பட்டர் பீன்ஸை கழுவி அளவாக தண்ணீர் விட்டு 4 விசில் வந்ததும் இறக்கவும்
வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைக்கவும், இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.
தக்காளி, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிகொள்ளவும், பச்சைமிளகாயை 2 ஆக கீறிவைக்கவும்.
தேங்காய், பெருஞ்சீரகம், கசகசா சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், பச்சைமிளகாய், தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அடுத்து அரைத்துவைத்துள்ள வெங்காயம் போட்டு பச்சைவாசம் போகும் வரை கிண்டவும். அடுத்து தக்காளி போட்டு நன்றாக குழையவதக்கவும்.
பின்னர் மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறிவிட்டு வேகவைத்துள்ள பட்டர்பீன்ஸை சேர்த்து கிளறி தேவைக்கு உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
எல்லாமும் சேர்ந்து வரும் போது அரைத்துவைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து கெட்டியான பதத்தில் இறக்கவும். இறக்கும் முன்பு கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்.
குறிப்புகள்:
சப்பாத்தி, பூரி, தோசை சூடு சாதத்திற்க்கும் மிகவும் பொருத்தம் இந்த குருமா