பச்சை மொச்சை வாழைக்காய் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை மொச்சை - 1 கப்

வாழைக்காய் - 1

பெரிய வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் - 6

சீரகம் - 1 தேக்கரண்டி

தனியா - 1 மேசைக்கரண்டி

தேங்காய் துருவல் - 1/2 கப்

புளி - 1 கோலிகுண்டு அளவு

பூண்டு -4 பல்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 10

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மொச்சையை 2 மணி நேரம் ஊற வைத்து தோலை பிதுக்கி பருப்பை மட்டும் எடுக்கவும்.

வாழைக்காயை தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

மிளகாய், சீரகம், தனியாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.

அதனுடன், தேங்காய், புளி, 2 பல் பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.

மொச்சை, வாழைக்காய், அரைத்த விழுது, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

மொச்சை, வாழைக்காய் வெந்தவுடன், எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை வதக்கி குழம்பில் கொட்டவும்.

உப்பு சேர்த்து 2 கொதி விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: