பச்சை பட்டாணி உருளை குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1/2 கப்

உருளை கிழங்கு - 1 அல்லது 2

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

பச்சரிசி - 1 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 1

கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, எண்ணெய் - தாளிக்க

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

பட்டாணி ஊர வைத்து வேக வைக்கவும்.

உருளை மிதமான அளவு துண்டுகளாக வெட்டி வேக வைக்கவும்.

பச்சரிசி, துவரம் பருப்பு கழுவி ஊர வைத்து, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இத்துடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், அரைத்த மசாலா சேர்த்து லேசாக வதக்கவும்.

இதில் வேக வைத்த பட்டாணி, உருளை, தேவையான நீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: