நெத்திலி மீன் குருமா
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 பெரிது
தக்காளி - 2 பெரிது
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4
சாம்பார் பொடி - 5 அல்லது 6 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/2 கப்
எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெத்திலியை சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
தேங்காயோடு சிறிது கொத்தமல்லி இலை சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் 3/4 பதம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து முழுதும் வதக்கவும்.
இதில் தக்காளி, பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி சேர்த்து குழைய வதக்கவும்.
பின் தூள் வகை, உப்பு எல்லாம் சேர்த்து பிரட்டி தயிர் சேர்த்து கலந்து விடவும்.
எல்லாம் ஒன்றாக திரண்டு வரும் போது தேவையான நீர் விட்டு கலந்து கொதிக்க விடவும்.
தூள் வாசம் முழுமையாக போன பின் மீனை சேர்த்து மூடி வேக விடவும்.
மீன் வெந்ததும் தேங்காய் அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதிவிட்டு எடுத்து பரிமாறவும்.