நூல்கோல் பட்டாணி குருமா
தேவையான பொருட்கள்:
நூல்கோல் - 1/4 கிலோ
பச்சை பட்டாணி - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 1/4 தேக்கரண்டி
சோம்புத் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நூல்கோல், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். குக்கரில் பச்சை பட்டாணியைப் போட்டு, தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
பிறகு வேக வைத்த பட்டாணியுடன் நூல்கோல், பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், சோம்புத் தூள் சேர்த்து தாளித்து குருமாவில் ஊற்றிக் கிளறவும்.
குறிப்புகள்:
நான் உலர்ந்த பச்சை பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்து பயன்படுத்தியுள்ளேன்.
ஃப்ரெஷ் பட்டாணியையும் பயன்படுத்தலாம்.