நூல்கோல் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நூல்கோல் - 2

வெங்காயம் - 1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

அரைக்க:

தேங்காய் - 3 துண்டு

முந்திரி - 5

பட்டை - சிறிது

லவங்கம் - 3

ஏலக்காய் - 1

பச்சை மிளகாய் - 2

சோம்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பிறகு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு தோல் நீக்கி நறுக்கிய நூல்கோலைச் சேர்த்து பிரட்டவும்.

அதனுடன் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, தேவையான அளவு நீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.

அரைக்க கொடுத்திருப்பவற்றை மிக்சியில் போட்டு தேவையான அளவு நீர் ஊற்றி அரைத்து வைக்கவும்.

நூல்கோல் வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி உப்பு சரிபார்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த குருமாவில் நூல்கோல் மட்டும் சேர்க்காமல் உருளை குருமா போல பட்டாணி, உருளை கூட சேர்த்து செய்யலாம். சுவையாக இருக்கும்.

முந்திரி சேர்ப்பது உங்கள் விருப்பம். கட்டாயம் இல்லை. கசகசா சேர்த்தும் அரைக்கலாம்.

கடுகு, சீரகம் தாளிக்காமல் வெங்காயத்தை மட்டும் வதக்கியும் செய்யலாம்.

இட்லி, தோசை, சப்பாத்திக்கு நல்ல சைட் டிஷ்.