நீலகிரி மட்டன் குருமா
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
தயிர் - 1/4 லிட்டர்
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
கசகசா - 3 தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 5
தனியா தூள் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
நெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மட்டனைக் கழுவி தயிரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பாதி வெங்காயம், பச்சை மிளகாய், கசகசா, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா சேர்த்து அரைத்து வைக்கவும்.
குக்கரில் நெய் விட்டு காய்ந்தவுடன் மீதி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அரைத்த விழுது, தனியா தூள், ஊற வைத்த கறி சேர்த்து வதக்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடவும்.
மட்டன் நன்கு வெந்ததும் கரம் மசாலாவை தூவி இறக்கி பரிமாறவும்.