நவரத்ன குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காளிஃப்ளவர் - 100 கிராம்

காரட் - 100 கிராம்

பட்டாணி - 200 கிராம்

உருளைக்கிழங்கு - 200 கிராம்

பீன்ஸ் - 50 கிராம்

பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் - 1/2 கப்

திராட்சை பழம் - 100 கிராம்

முந்திரிப்பருப்பு - 10

எலுமிச்சம் பழம் - 1/2 கப்

தேங்காய் - ஒரு மூடி

பெரிய வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 6

கொத்தமல்லி - 3 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி

கசகசா - 1 மேசைக்கரண்டி

கிஸ்மிஸ் - 1 மேசைக்கரண்டி

மல்லிச்செடி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தயிர் - ஒரு கப்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி

உப்பு - சிறிது

செய்முறை:

காய்கறிகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக ஒரே அளவாக வெட்டவும்.

அன்னாசிப் பழங்களை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

தேங்காயை சில்லாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் சில் ஒன்றையும், முந்திரிப்பருப்பையும் போட்டு தனியாக அரைத்து எடுக்கவும்.

பச்சைமிளகாய், பெருஞ்சீரகம், கசகசா, ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

அத்தோடு அரைத்த மசாலையும், காய்கறிகளையும் போட்டு வதக்கி அரைத்த தேங்காய், முந்திரிப்பருப்பை சேர்த்து வேக வைக்கவும்.

நன்கு குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய மல்லித் தழையைத் தூவி எலுமிச்சம் பழம் பிழிந்து இறக்கவும்.

பிறகு குருமா சிறிது ஆறியதும் வெட்டி வைத்த அன்னாசி பழங்களைச் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: