நவரத்தின குருமா
தேவையான பொருட்கள்:
சதுரங்களாக நறுக்கிய காய்கறிகளின் கலவை (கேரட், பீன்ஸ், கிழங்கு, காலிஃப்ளவர், பட்டாணி) - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி விழுது - 1/2 கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பொரித்த பனீர் - 50 கிராம்
பால் - 1/2 கப்
கடைந்த பாலேடு அல்லது கீரிம் - 2 மேசைக்கரண்டி
தயிர் - 1 மேசைக்கரண்டி
முந்திரி - 10
உலர்ந்த திராட்சை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை அளவான தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும். பின் தக்காளி விழுதை போட்டு வதக்கவும்.
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் போட்டு வதக்கிக் கொள்ளவும். அதனுடன் வேகவைத்த காய்கறிகளை போட்டு சமமாக கிளறவும்.
பின் பால், தயிர், பாலேடு, உப்பு, கரம் மசாலாத்தூள், தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கெட்டியானவுடன் பொரித்த பனீர், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி 3 நிமிடங்கள் கழித்து இறக்கி பரிமாறவும்.