நண்டு குருமா (1)
தேவையான பொருட்கள்:
நண்டு - 6
தேங்காய் - 1/4 மூடி
தயிர் - 1/2 கோப்பை
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி விழுது - 1/2 தேக்கரண்டி
பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
காய்ந்தமிளகாய் - 6
தனியா - 1 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
மிளகு சீரகம் - 1 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 1/2 கோப்பை
உப்பு - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
நண்டை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொண்டு வெறும் சட்டியில் போட்டு இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு காய்ந்த மிளகாயுடன் தனியா, மிளகு சீரகம், பட்டை, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து கொள்ளவும்.
இதனுடன் தேங்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். பிறகு அரைத்த மசாலாவை போட்டு வதக்கி தயிரை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்புத்தூளை தூவி நண்டை போட்டு கிளறி விடவும்.
இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி பத்து நிமிடம் கொதிக்கவைத்து இறக்கி பரிமாறவும்.