நண்டு குருமா
தேவையான பொருட்கள்:
நண்டு - 6
நாட்டு வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 1
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய்ப் பால் - 2 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகப்பொடி - 1 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
டால்டா - 1 மேசைக்கரண்டி
கிராம்பு - 4
மிளகாய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் நண்டை ஓடு நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கவும், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கவும்.
பின்பு ஒரு வாணலியில் டால்டாவை விட்டு உருகியதும் அதில் பட்டை, கிராம்பு, வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
பின்பு அதில் பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி அதில் மிளகாய்ப்பொடி போட்டு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வாசனை வரும்வரை வதக்கி அதில் நண்டு துண்டுகளைப் போட்டு கிளறவும்.
பின்பு அதில் தேங்காய்ப்பால், உப்பு, அனைத்து மசாலாப்பொடிகளையும் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். நண்டு வெந்து, குருமா திரண்டு வந்தப் பின் இறக்கி பரிமாறவும்.