தயிர் குருமா
தேவையான பொருட்கள்:
புளித்த கொட்டித் தயிர் - 1 கப்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 4 பற்கள்
தனியா - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1/2 தேக்கரண்டி
பட்டை, ஏலம், கிராம்பு, முந்திரி - தலா 5 கிராம்
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சியுடன் பூண்டு, தனியா, கசகசா, முந்திரி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்தவற்றைத் தயிருடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலையைப் போட்டு வதக்கியெடுத்து, தயிருடன் சேர்த்துக் கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும். அத்துடன் நறுக்கிய காய்கறிகளையும், தயிர் கலவையையும் சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.