தக்காளி குருமா 2

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 4 பல்

இஞ்சி - சிறிது

பச்சை மிளகாய் - 5

தேங்காய் துருவல் - 1/4 மூடி

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

பட்டை - சிறிது

கிராம்பு - 2

கடுகு - 1/2 தேக்கரண்டி

பொட்டுக்கடலை - 1 கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.

தேங்காய், 3 பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். குருமா கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: