தக்காளி குருமா (6)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 100 கிராம்

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1 (பெரியது)

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கருவா - சிறிய துண்டு

மசாலா தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தக்காளியை சாறு எடுத்துக்கொள்ளவும்.

தேங்காய் துருவலையும், கசகசாவையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் வாணலியைவைத்து எண்ணெய் ஊற்றி கருவா போட்டு வதக்கி பின் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

பின் தக்காளி சாறு, மசாலாதூள், அரைத்த தேங்காய், கசகசா விழுது, உப்பு போட்டு நன்கு நன்கு கிளறி மிதமான தீயில்வைத்து கொதித்ததும் சிறிது நேரம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: