தக்காளி குருமா (3)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 4

சீரகம், கடுகு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.

தக்காளியை கழுவி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். அதனுடன் நறுக்கின வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு வதங்கியதும் தக்காளி துண்டுகளை போட்டு வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைந்து வந்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.

லேசாக தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக விடவும்.

தக்காளி மீது எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை நிறுத்தவும்.

குறிப்புகள்:

சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எளிதில் சமைக்கக்கூடிய தக்காளி குருமா.