தக்காளி குருமா
தேவையான பொருட்கள்:
தக்காளி - 5 அல்லது 6
வெங்காயம் - 2
சோம்புத் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
தேங்காய்ப் பால் - 1 கப்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியின் அடிப்பகுதியில் கூட்டல் குறி வடிவில் கத்தியால் கோடிட்டு, கொதிக்க வைத்த தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு வைக்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு தக்காளியிலுள்ள தோலை நீக்கிவிடவும். (இவ்வாறு கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு வைத்தெடுத்து தோலை உரித்தால் தோல் எளிதில் வந்துவிடும்). தோல் நீக்கப்பட்ட தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் தக்காளி விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
பிறகு தூள் வகைகள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
அத்துடன் தேங்காய்ப் பால் சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்கவிட்டு, மல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
தேங்காய்ப் பாலுக்குப் பதிலாக தேங்காயை அரைத்தும் சேர்க்கலாம்.
சுவையான தக்காளி குருமா தயார். இட்லி, தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.