தக்காளிக் குருமா

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/4 கிலோ

கசகசா - 2 தேக்கரண்டி

தேங்காய் - மூன்று கீற்று

பெரிய வெங்காயம் - 1

பச்சைமிளகாய் - 6

அன்னாசிப்பூ - 1

கிராம்பு - 2

பட்டை - ஒரு சிறியதுண்டு

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கசகசா, தேங்காய் இவற்றை ஒன்றாய் வைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கி ஒரு சட்டியில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, மஞ்சள் பொடிப் போட்டு வேக வைக்கவும்.

முக்கால் வேக்காடு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினைப் போட்டு, உப்பையும் சேர்த்து வேகவிட்டு கெட்டியானவுடன் இறக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். அதில் கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ போட்டு பொரிந்தவுடன், பெரிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்தவுடன் தக்காளிக் குழம்பை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: