டபுள் பீன்ஸ் குருமா
தேவையான பொருட்கள்:
பச்சை டபுள் பீன்ஸ் - 100 கிராம்
பட்டாணி - சிறிது
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
மல்லி தழை - சிறிது
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
மஞ்சள்பொடி - சிறிது
சீரக பொடி - சிறிது
பட்டை - 1 துண்டு
ஏலம் - 2
கிராம்பு - 3
பட்டர் - 1 மேசைக்கரண்டி
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட் - 1 தேக்கரண்டி
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
டபுள்பீன்ஸ், பச்சைபட்டாணி உலர்ந்ததாக இருந்தால் இதில் பாதி அளவே எடுத்து இரவு ஊற வைக்கவும். ஃப்ரெஷ் ஆக இருந்தால் தேவை இல்லை.
குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, ஏலம், கிராம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறவும்.
தேங்காயை வேர்க்கடலையை நீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக்கொள்ளவும்.
வதங்கிய கலவையில் டபுள்பீன்ஸ்,பட்டாணியுடன்,அரைத்த தேங்காய் விழுது மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.
உப்பு, மசாலா பொடிகள் சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேக செய்யவும்.
இறுதியில் நறுக்கிய மல்லி, பட்டர் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
சப்பாத்தி, பரோட்டா, நாண், குல்சா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.