சுலப கோழிக்கறி குருமா
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1/2 கிலோ
உருளை கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 8
இஞ்சி - சிறிது
பூண்டு - 10 பல்
முந்திரி - 10
பட்டை - சிறிது
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்த மல்லி இலை - அரை கட்டு
புதினா - அரை கட்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
இஞ்சி, பூண்டு, வெங்காயம், சோம்பு, கசகசா, முந்திரி, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
தேங்காயை துருவி பாலெடுத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். நல்ல வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும்.
கோழிக்கறி நன்கு வதங்கிய பின், 2 தம்ளர் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும், உருளைக்கிழங்கு, தேங்காய் பால் சேர்த்து நன்கு வேக விடவும்.கோழிக்கறி முழுவதும் வெந்து குருமா திக்கானதும் இறக்கி பரிமாறவும்.